ஆந்திராவில் ஜெகன் கட்சி தோல்வியை சந்திக்கும்

by Staff / 14-05-2024 04:15:48pm
ஆந்திராவில் ஜெகன் கட்சி தோல்வியை சந்திக்கும்

ஆந்திராவின் சட்டசபை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு சில இடங்களில் வன்முறையுடன் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே வெல்லும். கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். மேலும் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106+ இடங்களை வெல்லலாம் என அவர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் 8 இடங்களிலும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via