செந்தில்பாலாஜி வழக்கை முடிக்க கெடு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு மீது மனுத்தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்ட கூடாது என தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை 3 மாதங்களில் முடிக்க கடந்த பிப்ரவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















