கோடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு பயம் இல்லை: ஜெயக்குமார்

by Editor / 23-08-2021 09:41:28am
கோடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு பயம் இல்லை: ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில், கோடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கோடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர்.
நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா?. 
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கோடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல். சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கோடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா?

உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பை செய்து அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார். 

 

Tags :

Share via

More stories