பாப் பிரான்சிஸ் சர்ச்சை கருத்து

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 10 இளைஞர்களுடன் பாப் பிரான்சிஸ் பங்கேற்ற கூட்டம் ஒன்று கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், பேசப்பட்ட விவரங்கள் ஆவணப்படமாக தொகுக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. அதில், பாலியல் உறவு பற்றி போப் பிரான்சிஸ் பேசும்போது, கடவுள், மனிதர்களுக்கு வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று பாலியல் உறவுகள் என இளைஞர்களிடம் பாப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். யாரையும் கடவுள் நிராகரிப்பதில்லை. கடவுள் தந்தையாக இருக்கிறார். அதனால், ஆலயத்தில் இருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை என தெரிவித்துள்ளார்.
Tags :