தூத்துக்குடி விசைப்படகுகள் ஸ்ட்ரைக் வாபஸ் : நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு!

by Editor / 30-01-2025 11:52:59pm
தூத்துக்குடி விசைப்படகுகள் ஸ்ட்ரைக் வாபஸ் : நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு!

தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக நீடித்த விசைப்படகுகள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த கேரள விசைப் படகுகளை சிறை பிடித்தது தொடா்பாக 11 விசைப்படகுகள், அதிலுள்ள மீனவா்கள் மீது மீன்வளத் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்பப் பெறவேண்டும், ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 27ஆம் தேதி முதல் விசைப்படகு உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்று சமுக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து நாளை முதல் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 272 படகுகளில் நாளை 135 படகுகள் கடலுக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. மேலும் காலை 5 மணிக்கு சென்றுவி்ட்டு இரவு 9 மணிக்குள் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மீன் ஏலம் தினமும் காலை 8 மணிக்கு நடைபெறும். சனிக்கிழமை மட்டும் இரவு 8 மணி முதல் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தூத்துக்குடி விசைப்படகுகள் ஸ்ட்ரைக் வாபஸ் : நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு!

Share via