மக்களை மோடி திசை திருப்புகிறார் -பிரியங்கா குற்றச்சாட்டு
ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பிரியங்கா கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசுகையில், பாஜக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், மோடி அதையெல்லாம் விட்டுவிட்டு உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்.கடந்த பத்து ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியையும், உண்மையான பிரச்னைகளையும் பிரதமர் மோடி பேசுவதில்லை. மக்களின் வாழ்க்கைக்கு தொடர்பில்லாத புதிய பிரச்னைகளை எழுப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :