என்னையாரும் தடுக்க முடியாது-அதிரடியாக விளாசிய தமிழிசை

by Editor / 21-10-2022 10:40:48am
என்னையாரும் தடுக்க முடியாது-அதிரடியாக விளாசிய தமிழிசை

கவர்னராக தெலுங்கானா, புதுச்சேரியில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 3 ஆண்டுகள் செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்திக்குறிப்புகள் அடங்கிய 'தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளுதல்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய தமிழிசை, ''எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். தெலுங்கானாவில் விரட்டிவிட்டார்களா? புதுச்சேரியில் விரட்டி விட்டார்களா? என்று கேட்கின்றனர். தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன், காலையும் பதிப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல் தமிழகத்தில் தவறு நடந்தால் அதையும் சுட்டி காண்பிப்பேன்" என்று பேசினார்.

 

Tags :

Share via

More stories