காட்டெருமை தாக்கி முதியவர் பலி

by Staff / 25-10-2022 12:33:54pm
காட்டெருமை தாக்கி முதியவர் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர் (62). இவர் பிளம்பராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி காலை ராஜசேகர் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வழியில் காட்டெருமை கூட்டமாக நின்றிருந்த நிலையில், அவற்றில் ஒரு காட்டெருமை ராஜசேகரை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via
Logo