திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

by Editor / 24-05-2024 11:30:07pm
திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு, வாகை குளத்தை சேர்ந்த தீபக் ராஜா என்பவர் 20.05.2024 அன்று படுகொலை செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்  அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் வாங்கும்வரை ஏதேனும் அசம்பாவிதங்கள்  ஏற்படாமல் இருப்பதற்கு, உடலை வாங்கி வாகைகுளத்திற்கு கொண்டு செல்லும் போதும் திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத வகையில் இருப்பதற்காக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியும், (bike patrol) இருசக்கர வாகனத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து பணியிலும், முக்கிய இடங்களில் காவலர்கள் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தி பிரச்சனைகள் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு.

Share via

More stories