சங்கரன்கோவிலில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணிபிரமண்ட ஏற்பாடுகள்ஆளுநர் பங்கேற்ப்பு.

by Editor / 05-10-2024 09:26:16pm
சங்கரன்கோவிலில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணிபிரமண்ட ஏற்பாடுகள்ஆளுநர் பங்கேற்ப்பு.

சங்கரன்கோயிலில் நாளை மாபெரும் போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார்.

 அவர் கூறியதாவது:போதை இல்லா தென்காசி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோயிலில் வருகிற 6ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரோடு  ஷோகோ முதன்மை செயல் அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெண்கள், இளைஞர்கள் எங்களது வாய்ஸ் ஆப் தென்காசி இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். பெற்றோர்கள் பலரும் தங்களது பிள்ளைகளோடு கலந்து கொள்ள ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

பேரணிக்கு வரும் பொதுமக்கள் சங்கரன்கோயில் பழைய பேருந்து நிலையத்திற்கு காலை 9 மணிக்குள் வந்து சேர வேண்டும். அங்கிருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் பேரணி திருவேங்கடம் சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்குச் சென்றடையும். பொதுக் கூட்ட மேடையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு பொதுக்கூட்டத்திப்போது அனைவரும் போதை வஸ்துகளுக்கு எதிராக ஒருசேர உறுதிமொழி ஏற்கும் பிரமாண்ட நிகழ்வும் நடைபெற உள்ளது.
பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்ப்டும். மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு ஆனந்தன் அய்யாசாமி கூறினார்.
 

 

Tags : சங்கரன்கோவிலில் மாபெரும் போதை ஒழிப்பு பேரணிபிரமண்ட ஏற்பாடுகள்ஆளுநர் பங்கேற்ப்பு 

Share via