எம்ஜிஆர் ஸ்டைலில் மாறிய எடப்பாடி பழனிசாமி

by Staff / 28-03-2023 05:05:46pm
எம்ஜிஆர் ஸ்டைலில் மாறிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் அவைத் தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலையில் தொப்பி, கூலிங் கிளாஸ் உடன் எம்ஜிஆர் தோற்றத்தில் காட்சியளித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் பூரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

 

Tags :

Share via