வீட்டுக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி

by Staff / 08-04-2023 11:26:48am
வீட்டுக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவில், வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த மாவட்டத்தில் உள்ள ராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நௌதன் ஹதியாகரில், கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதியது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் பலத்த காயம் அடைந்ததுடன், வீடு இடிந்து விழுந்தது. காயமடைந்தவர் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo