கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி மனு - நீதிமன்றம் எச்சரிக்கை

by Staff / 08-04-2024 02:41:07pm
கெஜ்ரிவாலை பதவி நீக்கக்கோரி மனு - நீதிமன்றம் எச்சரிக்கை

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டு ஏப்ரல் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்கபட்டுள்ளார். இதனிடையே, கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த மனுக்களை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மேலும் இதுபோன்ற மற்றொரு மனு இன்ற (ஏப்ரல் 8) விசாரணைக்கு வந்தநிலையில்,இதுபோன்ற மனுக்கள் மீண்டும் வந்தால் கடும் அபராதம்விதிக்கப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via
Logo