பாம்பன் ரயில் பாலத்தில் ஜனவரி 10-வரை ரயில் போக்குவரத்து ரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஓசை ஒலித்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை ஐஐடி வல்லுனர்கள் காலி ரயில் பெட்டி தொடர்களை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவுகள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது. எனவே மேலும் பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில் ஜனவரி 10 வரை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :