60000 கஞ்சா செடிகளை அழித்த பாதுகாப்பு படையினர்

மேற்கு திரிபுராவின் சித்தாய் மோகன்பூர் கிராமத்தின் பஞ்சபதி பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன என்ற தகவல் அறிந்து திரிபுரா போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அங்கு சென்ற அவர்கள் சுமார் 60000 கஞ்சா செடிகளை தீ வைத்து அழித்தனர். பின்னர் அங்கிருந்து திரும்பிய அவர்கள் மீது கற்கள் மற்றும் செங்கல் கொண்டு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :