தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.

by Editor / 09-03-2025 04:53:57pm
 தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான  காற்று சுழற்சி தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகர்வதால் மார்ச் 11 ம்தேதி முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 11 ம்தேதி தூத்துக்குடி நெல்லை தென்காசி இராமநாதபுரம் கன்னியாகுமரி விருதுநகர்  தஞ்சை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை  ஆகிய 10 மாவட்டங்களில்  இடி மின்னலுடன்  கனமழை பெய்யும். மேலும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய உள் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்பு.

மார்ச் 12 ம்தேதியை பொறுத்தவரை நெல்லை தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 

மார்ச் 11 ம்தேதியை பொறுத்தவரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் .குறிப்பாக அன்றைய நாளில் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும் இடி மின்னலும் வலுவாக இருக்கும். குற்றால அருவிகள் களைகட்டும். பாபநாசம் மணிமுத்தாறு உட்பட தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.


 

 

Tags :  தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

Share via