நெருங்கும் சட்டமன்றத்தேர்தல் திணறும் திமுக.உட்கட்சி பூசலை சாமர்த்தியமாக கையாண்ட அமைச்சர்.

by Editor / 09-03-2025 04:22:52pm
நெருங்கும் சட்டமன்றத்தேர்தல் திணறும் திமுக.உட்கட்சி பூசலை சாமர்த்தியமாக கையாண்ட அமைச்சர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியினுடைய செயற்குழு கூட்டம் தென்காசி பொறுப்பு அமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆன கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

ஏற்கனவே தென்காசி  மாவட்டத்தில் திமுக உட்கட்சி பூசலால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவித்துவருகிறது.தெற்குமாவட்ட செயலாளராக ஜெயபாலன் நியமிக்கப்பட்டதிலிருந்தே இந்த பூகம்பம் கட்சிக்குள் இருந்துவரும் .நிலையில் தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் என்பவரை துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்த சம்பவத்தில்மாவட்ட செயலாளரின் பங்கு அதிகமாக இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவரும் நிலையில் கடந்த  1 மாதத்திற்கு முன்பு சுரண்டையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துவந்து நடத்திய விழாவில் உள்ளூர் திமுக நிர்வாகிகளை மத்தியில் முதல் எதிர்ப்பு வலுவாக தொடங்கியது.இந்த நிலையில் 10தினங்களாக அறங்காவலர்குழு பட்டியல் பிரச்னை பூதகரமெடுத்தது.இப்படி பல்வேறு தகவல்கள் பொறுப்பு .அமைச்சர் காதுக்கு சென்ற நிலையில் கட்சி நிர்வாகிகளை மேடையில் சந்திக்காமல் தென்காசி தெற்குமாவட்ட திமுக அலுவலகத்தில்  அறையில் பூட்டு போட்டு கொண்டு கையில் பல குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை  வைத்துக்கொண்டு நிர்வாகிகளுக்கு இடையே உள்ள அதிருப்திகளை கேட்டறிந்து சமரசம் செய்து வைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலை கோவில் காசி விஸ்வநாதர் ஆலயம் இலஞ்சி குமரன் கோவில் குற்றாலம் குற்றாலநாதர்  ஆகிய நான்கு ஆலயங்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ததில்பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இது கட்சியினர்  மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.அது  மட்டுமின்றி  அதிருப்தி ஏற்பட்டு உள்ளது இதன் காரணமாக நடைபெற்ற கூட்டத்தில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படும் என்று எதிர்பார்த்து இந்த நிலையில் எந்த பிரச்சனையும் வரவிடாமல் சாமர்த்தியமாக  கூட்டத்தை அமைச்சர் நடத்தி முடித்தார்.இந்தநிலையில் தென்காசி தெற்குமாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனை கண்டித்து ஊரெல்லாம் பட்டப்பட்டுள்ள சுவரொட்டியும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.இதுகுறித்து அவரது தரப்ப சேர்ந்த சாமித்துரை எஸ்.பி.அலுவலக,காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளார்.

 

Tags : நெருங்கும் சட்டமன்றத்தேர்தல் திணறும் திமுக.உட்கட்சி பூசலை சாமர்த்தியமாக கையாண்ட அமைச்சர்.

Share via