பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு.

பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1006 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்த எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த் மற்றும் கில்ஜித் -பல்திஸ்தான் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Tags : பாகிஸ்தானில் தொடர் மழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு