மூன்று அரசு பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்ற மாணவர்கள்

by Editor / 20-11-2024 06:38:13pm
மூன்று அரசு பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை  மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்ற மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருந்தநிலையில்  விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்திருந்தது. இந்நிலையில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்சுழி சேதுபதி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்றனர்.

 

Tags : மூன்று அரசு பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு சென்ற மாணவர்கள்

Share via

More stories

Logo