மதுவுடன் விஷம் கலந்து சாப்பிட்ட நண்பர்கள் இருவர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார்,அரிலால் இவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் நேற்றிரவு மது அருந்தும் போது இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தியதாக கூறப்ப்டுகிறது.இதன் தொடர்ச்சியாக இதனை அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே உறவினர்கள் இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர் இருவரும் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். எதற்காக நண்பர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.என்ன காரணம் என்பது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :