"போதைப்பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை”அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 28-06-2024 01:28:39pm

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கத்தில், “போதைப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் மருந்துகளின் விற்பனை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அடிமை பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் மருந்துகளை விற்பனை தொடர்பாக, 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024 மே 31ஆம் தேதி வரை 505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via