ஒரு லட்சம் பேருக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்த்த ஒரே வேட்பாளர் .

ஒரு லட்சம் பேருக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்த்த ஒரே வேட்பாளர் - எங்கள் வேட்பாளர் தான் சிங்கப்பூரிலிருந்து பாராசூட்டில் வந்து குதித்த வேட்பாளர் எங்கள் வேட்பாளர் கிடையாது- மண்ணின் மைந்தர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று.இதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசுகையில்,
இருக்கின்ற வேட்பாளர்களில் ஒரு லட்சம் பேருக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்த்த ஒரே வேட்பாளர் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தான்சிங்கப்பூரிலிருந்து பாராசூட்டில் வந்து குதித்த வேட்பாளர் எங்கள் வேட்பாளர் கிடையாதுகனிமொழி எங்கிருந்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்
இந்த மண்ணின் மைந்தர் எங்கள் வேட்பாளர்கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுக்கு இரட்டை இலை வேண்டும் என்று கூறியவர்கள் உச்சநீதிமன்றம் சென்று சின்னத்தை முடக்குங்கள் என்று கோரிக்கை வைத்தனர்
எடப்பாடி பழனிச்சாமி தான் இரட்டை இலைக்கு சொந்தக்காரர் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது என்றார்.மேலும் இரட்டை இலை பிரச்சினை மற்றும் ஓ.பி.எஸ் பற்றி கூறும் வகையில் பைபிளில் உள்ள கதை ஒன்றையும் சொன்னார்.
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும்.நாடாளுமன்ற தேர்தல் நமக்கு செமி ஃபைனல் - இதில் வெற்றி பெற்றால் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தல் பைனலுக்கு சென்று வெற்றி பெற முடியும்அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு .க ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்
தமிழகத்தில் அதிக தொகுதிகள் நிற்கும் கட்சி அதிமுக தான். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட அதிமுகவில் யாரும் இல்லை என்று கூறினார்கள்
அனைவரும் கன்னத்தில் கைவைத்து ஒதுங்கி நிற்கும் வகையில் எளிய தொண்டரை வேட்பாளராக அதிமுக நிறுத்தியுள்ளது .திமுக போன்று குடும்ப அரசியல் வரிசினை நிறுத்தாமல் அதிமுக கிளை செயலாளரை நிறுத்தியுள்ளது. அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது
திமுக நம்ம (அதிமுக)பக்கதில் கூட வர முடியாத நிலை மக்கள் மனதில் உள்ளது. அதிமுக என்பது நம்பர் 1 இயக்கம்
திமுக அரசின் கடந்த 3 ஆண்டுகளாக செய்த சாதனகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லவில்லை. அதிமுக - பாஜக இடையே கள்ள உறவு இருப்பதாக கூறி பேசி வருகின்றார்.2019ல் இருந்த அலை போல் இன்றைக்கு அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது
ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தாங்கள் செய்த சாதனை களை செய்ய மால் அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி பற்றி தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுகவிற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அதிமுகவினரை கண்டு முதல்வருக்கு பயம் வந்து விட்டது
மகளிர் உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி இது போன்ற பிரச்சனைகளில் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்
அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக உள்ள நிலைஅதிமுக வேட்பாளர் சென்னைக்கு ஓடி போய் விடமாட்டார். இங்கே தான் இருப்பார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதும் அவர் சென்னையில் வைத்து இருப்பது போல் 6 சட்டமன்ற தொகுதியில் புத்தூர் கட்டு மையம் அமைக்கப்படும்
3வது கூட்டணி புஸ்வாணம் ஆகி விட்டது
திமுக - பாஜகவின் தான் இடையே தான் போட்டி என்று மாயை உருவாக்க நினைத்தவர்கள் புஸ்வாணம் ஆகி விட்டார்கள்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அந்த அணியில் டம்மி வேட்பாளரை அறிவித்துள்ளனர்.ஏற்கனவே பஞ்சராண சைக்கிளை தூசி தட்டி கொண்டு வந்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்தனர் ஆனால் அந்த சின்னம் நமக்கு தான் சொந்தம் என்று வந்துவிட்டது.. எத்தனையோ கட்சிகளுக்கு சின்னம் கிடைக்காத நிலை உள்ளது.திமுக கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை , திமுக கூட்டணி கட்சியினர் கண்ணீருடன் உள்ளனர். அங்கு ஒற்றுமை இல்லை
நாடாளுமன்ற தேர்தல் நமக்கு செமி ஃபைனல் - இதில் வெற்றி பெற்றால் அடுத்த வரும் சட்டமன்ற தேர்தல் பைனலுக்கு சென்று வெற்றி பெற முடியும் என்றார்.
நாய் போல என்றைக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன் - தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேச்சு..
இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேசுகையில்:
நான் அ.தி.மு.க., வேட்பாளராக உங்கள்முன் நின்று கொண்டு இருக்கிறேன். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ என்னை தந்தை போல் கையைப் பிடித்து சென்று வழிநடத்துகிறார். இ.பி.எஸ்., பொற்கால ஆட்சி நடத்தினார். இப்போது அவல ஆட்சி நடக்கிறது.
துாத்துக்குடியில் வரி கட்டவில்லையென்று, குடிநீர் இணைப்பை துண்டிக்கிறார்கள்.
கஞ்சா, போதை, ரவுடிசம் அதிகரித்திருக்கிறது.
தி.மு.க., வேட்பாளரின் கணவர், மகன் இந்திய குடியுரிமை பெறவில்லை. இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்குத்தான் மண் மற்றும் மக்கள் பாசம் இருக்கும்.
குடும்ப வசதியை பெருக்கி கொள்வதற்கு மட்டுமே இங்கு உள்ளார்.
தேர்தலில் விருப்பமனுக்கூட தி.மு.க.,வினர் கொடுக்க முடியவில்லை. தி.மு.க.,வினர் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.,வினரை விருப்பமனுக்கூட கொடுக்கவிடாமல் அடிமை படுத்தி வைத்துள்ளனர்.
துாத்துக்குடி தொகுதியில் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. மீண்டும் எம்.பி., ஆகி மக்களை அடிமைப்படுத்த நினைக்கிறார். அதை முறியடிக்கவேண்டும்.
நாய் நன்றி உள்ளது. அதுபோல், நான் உயிருள்ளவரை அ.தி.மு.க.,வுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
இவ்வாறு சிவசாமி வேலுமணி பேசினார்.

Tags :