நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழு அமைப்பு.

by Editor / 20-11-2024 06:42:08pm
நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழு அமைப்பு.

 நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசணை வெளியிட்டுள்ளது. வட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது மாநில அரசால் புதிய குழு அமைக்கும் வரை இருக்கும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு..

1. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் : குழுவின் தலைவர்

2. தாசில்தார் (தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி) – உறுப்பினர்

3.துணை இயக்குநர்/உதவி இயக்குநர், நகர மற்றும் ஊரமைப்புத் துறை, தென்காசி மாவட்டம்
– உறுப்பினர்

4.கே.ராஜாராம், பூவுலகின் நண்பர்கள், 2/7, மேலத்தெரு, முள்ளிகுளம், கடையநல்லூர் தாலுக்கா, தென்காசி மாவட்டம் – உறுப்பினர்

5.டாக்டர். M. செல்வி, M.Sc., Ph.D., உதவிப் பேராசிரியர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி), குற்றாலம், தென்காசி மாவட்டம் – உறுப்பினர்

6.டாக்டர் ஆர். கந்தசாமி, எம்.எஸ்சி., பிஎச்.டி., உயிரியலாளர், திருநெல்வேலி – உறுப்பினர்

7.செயற்பொறியாளர், (WRO), பொதுப்பணித்துறை, சிற்றார் பேசின் பிரிவு, தென்காசி – உறுப்பினர்

8. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தென்காசி
– உறுப்பினர்

9. துணை இயக்குநர்/உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, தென்காசி – உறுப்பினர்

10.மாவட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர், திருநெல்வேலி – உறுப்பினர் செயலாளர்
 

 

Tags : நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான கண்காணிப்புக் குழு அமைப்பு.

Share via