மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் -பிரதமர் மோடி.

by Staff / 02-10-2025 10:51:10am
மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் -பிரதமர் மோடி.

இன்று (அக்.02) 'காந்தி ஜெயந்தி" விழாவையொட்டி மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “காந்தி ஜெயந்தி என்பது, மனித வரலாற்றின் போக்கை மாற்றியவரின் அசாதாரண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவதாகும். சேவையும் இரக்கமும் மக்களை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான வழிகளாக உள்ளன என்று அவர் நம்பினார்” என்றார். காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்.

 

Tags : மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் -பிரதமர் மோடி.

Share via