தினசரி தொற்று 4 -வது நாளாக  4 லட்சத்தை தாண்டியது

by Editor / 09-05-2021 07:58:14pm
தினசரி தொற்று 4 -வது நாளாக  4 லட்சத்தை தாண்டியது



கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினசரி தொற்று பாதிப்பு நான்காவது நாளாக நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிதாக 4 ஆயிரத்து 92 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 362ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 மாவட்டங்களில் 50 சதவிகிதத்துக்கு மேலாகவும், 301 மாவட்டங்களில் 20 சதவிகிதத்துக்கு மேலாகவும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அரியானா, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தலா இரண்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via