மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பலி. 

by Editor / 01-03-2025 09:13:56pm
மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பலி. 

கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன் துறை பகுதியில் புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கான அலங்காரப் பணிகளை மேற்கொள்ள உயரமான இரும்பு ஏணியை 4 பேர் தூக்கி சென்றுள்ளனர்.

அப்போது மின்சாரா கம்பியின்  லைனில் ஏணி உரசியது. மின்கம்பியில் ஏணியானது பட்டு நான்கு பேர் உயிரிழப்பு-இதில் விஜயன்(48),மனோ(42),ஜெஸ்டஸ்(38),சோபன்(38) ஆகியோர் பலி-

இணையம் புத்தன் துறையில்  ஆலய திருவிழாவில் பூப்பந்தல் அமைக்கும் போதுஏணியை நீக்கும் போது மின்சாரக் கம்பியில் உரசி நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். 

தற்போது அவர்களின் உடல் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. இச்சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியும் சோகத்தின் ஏற்ப்படுத்தி உள்ளது . மின்சாரம் தாக்கும்போது அருகே இருந்தவர்கள் எடுத்தவீடியோ வெளியாகி மக்களை பதைபதைக்க வைக்கிறது. திருவிழாவிற்கு பூப்பந்தல் போடும்போது மின்கம்பியில் ஏணி உரசி இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டும். அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

 

Tags : மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பலி. 

Share via