14 மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை அறிவிப்பு

by Editor / 19-07-2021 12:16:15pm
 14 மாவட்டத்தில்  இடியுடன் கூடிய கனமழை அறிவிப்பு

21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌ தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌ சேலம்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதி மீனவர்கள் மற்றும் அரபிக் கடல் பகுதி மீனவர்கள் இன்று முதல் வருகின்ற 22ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories