மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு

மதுரை மாவட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டமானது ஜூன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியாகவும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2026 தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் பணியை மேலும் தீவிரப்படுத்த திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Tags :