மதுரையில் மு.க. அழகிரியுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு

by Editor / 10-02-2023 03:48:30pm
மதுரையில் மு.க. அழகிரியுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு

முன்னாள் முதல்வரின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மதுரை சத்யசாய் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் மகன் துரைதயாநிதியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த நடிகர் பிரபு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். அண்மையில் மதுரைக்கு வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நடிகர் பிரபு மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.சிவாஜியின் தீவிர ரசிகர் மு.க.அழகிரி என்பதால் நேரில் சந்தித்ததாகவும், மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via