உடனே திரும்பப் பெற வேண்டும்: எம்பி சு. வெங்கடேசன்

by Staff / 02-03-2024 01:43:15pm
உடனே திரும்பப் பெற வேண்டும்: எம்பி  சு. வெங்கடேசன்

இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான எழுத்துத் தேர்வை மத்திய அரசு நீக்கியுள்ளதை உடனே திரும்ப பெறவேண்டும் என்று எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான எழுத்துத் தேர்வை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு. வெங்கடேசன் எம். பி எழுதிய கடிதத்தில், நேர்காணல் வாயிலாக வங்கி அதிகாரிகள் தேர்வு நடைபெறும் என்ற மாற்றம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சம வாய்ப்பை மறுப்பதாகும். எனவே இம்முறையை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via