கோவில்பந்தல் தீவைப்பு.காவல்நிலையம் முற்றுகை-சாலைமறியல்.
கோவில்பந்தல் தீவைப்பு.காவல்நிலையம் முற்றுகை-சாலைமறியல். தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துமாலைபுரம் பகுதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு வேறு தரப்பினர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், ஒரு தரப்பினர் நடத்திய கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிக்கப்பட்டதில் மற்றொரு தரப்பினர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தல் தீ பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், பந்தல் முழுவதுமாக எரிந்து நாசமான நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குற்றாலம் காவல் நிலையத்தில் பட்டாசு வெடித்து பந்தலை தீப்பிடிக்க வைத்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரின் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நபர்களை சொந்த ஜாமினில் விடுவித்த நிலையில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்போது பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட நபர்கள் தென்காசி -மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய சூழலில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.Tags :