திருவாரூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு தொகை குறைவாக ஒதுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 561 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் 2023-2024 ஆம் ஆண்டில் நான்கரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கன மழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில் பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவசாய நிலங்களில் இந்த வருட பயிர் காப்பீடு நிறுவனமான இப்கோ டோக்கியோ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 561 வருவாய் கிராமங்களில் 72 கிராமங்கள் மட்டுமே சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட கிராமமாகவும் இவற்றிற்கான பயிர் காப்பீடு தொகையாக 15 கோடியே 99 லட்ச த்து 358 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பயிர் காப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் கன மழை காரணமாக சம்பா நெற் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 72 வருவாய் கிராமங்கள் மட்டுமே பயிர் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் அறிவித்து 15 கோடியே 99 லட்சத்து 358 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2022-2023 ம் ஆண்டிற்கு கனமழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதியாக 79 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 26 கோடியே 10,10,285 ரூபாய் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டை விட அதிக பயிர் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை மிகக் குறைவாக இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags : திருவாரூர் மாவட்டத்தில்பயிர் காப்பீடு தொகை குறைவாக ஒதுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி.