காஸாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு

by Staff / 10-11-2023 12:36:57pm
காஸாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு

காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் மீது போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸுக்குச் சொந்தமான 130 சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் அழித்துள்ளதாக IDF வெளிப்படுத்தியுள்ளது. அங்கு சண்டையிட்டு வரும் வீரா்களுடன் இஸ்ரேல் ராணுவத்தின் பொறியாளா்கள் குழுவும் சென்றுள்ளது. அந்தக் குழு, மற்ற வீரா்களுடன் இணைந்து காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க நிலைகள் மற்றும் ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

 

Tags :

Share via