சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜன.7 வரை மட்டும் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.
Tags :