குரங்குகளுடன் செல்ஃபி: இளைஞர் பலி

by Staff / 05-01-2023 12:10:17pm
குரங்குகளுடன் செல்ஃபி: இளைஞர் பலி

மகாராஷ்டிராவில் செல்ஃபி மோகம் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. அங்குள்ள வரந்தா காட் சாலையில் குரங்குகளுடன் செல்ஃபி எடுக்கும் போது அப்துல் ஷேக் என்ற நபர் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. காரில் கொங்கன் நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்துல், வரந்தா காட் சாலையில் உள்ள வாக் ஜெய் கோயில் அருகே நின்று குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது பள்ளத்தில் தவறி விழுந்தார்.

 

Tags :

Share via

More stories