மருமகனின் பைக்கை கொளுத்திய மாமியார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (36), இவருக்கும் சசிகலா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சசிகலா சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்தி அழைத்துவர சென்ற முத்துக்குமாருக்கு சசிகலாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சசிகலா தனது தாயான சின்ன பாப்பாவுடன் இணைந்து முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :