டெல்லியில் கடும் நில அதிர்வு

டெல்லியில் NCR எனப்படும் தேசிய தலைநகர் மண்டலத்தில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவு கோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், பலர் வீட்டிலிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது. உ.பி., பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக அறியமுடிகிறது. அதேபோல், டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சண்டிகாரிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
Tags :