புதிய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்!

by Editor / 09-06-2021 07:54:09am
புதிய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா உள்ளார். 3 அதிகாரிகளை கொண்ட தேர்தல் ஆணையத்தின் மற்றொரு தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். ஒரு இடம் கடந்த ஏப்ரல் 12 முதல் காலியாக உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனுப் சந்திர பாண்டேயை நியமனம் செய்து ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டார். சட்ட அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் `1984ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த வர் பாண்டே. இவர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories