ஆதித்யா எல்1 விண்கலம் - டிடிவி தினகரன் வாழ்த்து

by Staff / 02-09-2023 05:04:42pm
ஆதித்யா எல்1 விண்கலம் - டிடிவி தினகரன் வாழ்த்து

ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், "சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Tags :

Share via