பாஜக தலைவர் நயினார் வீட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு விருந்து.

by Staff / 03-08-2025 10:34:34pm
பாஜக தலைவர் நயினார் வீட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு விருந்து.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் நெல்லை வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நெல்லையில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடையே இணக்கமும், தொண்டர்களிடையே நெருக்கமும் உருவாக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த ஊரான நெல்லைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  இரவு நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தனது  இல்லத்தில் 108 உணவு வகைகளுடன் பிரம்மாண்ட  சிறப்பு விருந்து நடைபெற்றது,இந்தவிருந்தில் தமிழிசை சவுந்திரராஜன்,மத்திய அமைச்சர் எல்.முருகன்,முன்னாள் மத்திய அமைச்சர்பொன்ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,ராஜலக்ஷ்மி,உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

Tags : பாஜக தலைவர் நயினார் வீட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பு விருந்து.

Share via