தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்: தலைமை நீதிபதி

by Editor / 29-09-2021 04:23:43pm
தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்: தலைமை நீதிபதி


தெருவோர நாய்களை பாதுகாக்க, படித்தவர்கள் முன்வர வேண்டும் என, தலைமை நீதிபதி கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலக ரேபிஸ் தினத்தையொட்டி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில், ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மருத்துவர் ராணி கவுர் பானர்ஜி, பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ராணி கவுர் பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேசிய நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, படித்தவர்கள், தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும். கடந்த 16-- 18 மாதங்களாக விலங்கு போன்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம். விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
ஜனவரி மாதம் கொல்கத்தா விலிருந்து குடும்பத்துடன் சாலை வழியாக சென்னை வந்தோம். செல்லப் பிராணியும் எங்களுடன் வந்தது. சென்னை வந்தவுடன் அது இறந்தது. தற்போது தெருவோர நாய்களை பராமரிக்கிறோம். விலங்குகள் நம்மிடம் அன்பை எதிர்பார்க்கின்றது. ஆனால் அதை நாம் புரிந்துகொள்வதில்லை என்றார்.

 

Tags :

Share via