தேர்தல் வாக்கு எண்ணிக்கை  விற்பனைக்காக காரில் மது  கடத்திய4 பேர் கைது .2496 மது பாட்டில்கள் பறிமுதல்.

by Editor / 25-05-2024 11:39:53pm
தேர்தல் வாக்கு எண்ணிக்கை  விற்பனைக்காக காரில் மது  கடத்திய4 பேர் கைது .2496 மது பாட்டில்கள் பறிமுதல்.

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள சேந்தமரம் காவல் நிலையத்திற்கு  உட்பட்ட கடையாலுருட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி  காரை முழுமையாக சோதனை செய்த பொழுது அதில் ஏராளமான பெட்டிகள் இருந்ததைக் கண்ட காவல்துறையினர் அந்த பெட்டிகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதனைதொடர்ந்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நான்கு நபர்களையும் பிடித்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று  விசாரணை செய்த பொழுது, நான்கு நபர்களும் முன்னுக்கு பின்னதாக பதில் அளித்துள்ளனர்.

 இதனை தொடர்ந்து காவல்துறையினரின் கிடுக்கு பிடி விசாரணையில் காரில் வந்தவர்கள் கல்லிடைக்குறிச்சி பகுதி சேர்ந்த மணிகண்டன், ஊர்க்காடு பகுதியை சேர்ந்த வடிவேல்,கீழ் பாட்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்த நாகராஜன்,மேலும் சிவா உள்ளிட்ட நான்கு பேர் என்பது தெரியவந்தது.

 மேலும் இவர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கிவருவதைமுன்னிட்டு அன்றையதினம் அதிக விலைக்கு விற்பனை செய்யவதற்காக டாஸ்மாக்கை கடைகளிலிருந்து மதுப்பாட்டில் களை வாங்கிவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விற்பனைக்காக மதுபாட்டிலை காரில் கடத்தியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நான்கு நபர்களையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 2496 மதுபாட்டில்களையும்  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


 

 

Tags : தேர்தல் வாக்கு எண்ணிக்கை  விற்பனைக்காக காரில் மது  கடத்திய4 பேர் கைது .2496 மது பாட்டில்கள் பறிமுதல்.

Share via