ஓமனின் மஸ்கட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு

by Admin / 18-12-2025 02:31:54am
ஓமனின் மஸ்கட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு

ஓமனின் மஸ்கட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பை அந்நாடு வழங்கியது இந்தியா ஓமன் உறவுகளின் 70 ஆண்டுகள் கொண்டாடும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அமைந்தது. இந்திய புலம் பெயர்ந்தோர் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். இந்தியா மற்றும் ஓமன் இடையேயான  கூட்டாண்மை வியூகம் உறவு நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்படுகின்றன.
ஓமன் தனது 'விஷன் 2040' திட்டத்தின் கீழ், எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மற்ற நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது .
 வளைகுடா பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதில் ஓமன் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. இது அண்டை நாடுகளுடனான அதன் உறவை மேலும் வலுப்படுத்துகிறது. ஓமன்- இந்தியா இடையே எரிசக்தி ,வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த முன்னேற்ற நிலைப்பாடுகளை உருவாக்கி  வலுப்படுத்தும் பயணம் இது.

 

Tags :

Share via

More stories