அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.;15 புதிய நாடுகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள்.
அமெரிக்கா புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.டிசம்பர் 16, 2025 அன்று வெளியிடப்பட்ட புதிய உத்தரவின்படி அமெரிக்காவிற்குள் நுழைய தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ,ஈரான் ,சிரியா, வடகொரியா, சோமாலியா, ஏமன் போன்ற நாடுகளுடன் புதிதாக புர்க்கினா பா சோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கோலா, நைஜீரியா, தான்சானியா உள்ளிட்ட 15 புதிய நாடுகளுக்கு விசா வழங்குவதில் பகுதி நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விசா விண்ணப்பதாரர்கள், இனி தங்களின் சொந்த நாட்டில் அல்லது அவர்கள் சட்டபூர்வமாக வசிக்கும் நாட்டில் தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். மற்ற நாடுகளில் எடுத்துக்காட்டாக ,தாய்லாந்து ,வியட்நாம் போன்ற நாடுகளில் விரைவாக விசா நேர்காணல் எடுக்கும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது..
விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக ஊடக கணக்குகள் மற்றும் 10 ஆண்டுகால மின்னஞ்சல் முகவரிகளை சமர்ப்பிக்க வேண்டும். ஹெச் ஒன் பி மற்றும் ஹெச் 4 விசா விண்ணப்பதாரர்கள் கூடுதல் பின்னணியில் சோதனைகள் செய்யப்படுவதால் விசா நடைமுறையில் காலதாமதங்கள் ஏற்படலாம். டிசம்பர் 12, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ள விதிகளின்படி விசா விண்ணப்பங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது என்றும் சுய புகைப்படங்கள் ஏற்கப்படாது என்றும் அங்கீகரிக்கப்பட்ட போட்டோ எடுக்கும் மையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே செல்லுபடி ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















