இனி ரயில்களில் இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய லக்கேஜ் எடை - கட்டணங்கள்.

by Admin / 18-12-2025 03:37:43am
இனி ரயில்களில் இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய லக்கேஜ்  எடை - கட்டணங்கள்.

இனி ரயில்களில் இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய லக்கேஜ் அளவு குறித்தும் அதற்காக கட்ட வேண்டிய கட்டணங்கள் குறித்தும் இந்திய ரயில்வே புதிய நடைமுறையை டிசம்பர் 2025 இலிருந்து அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஒவ்வொரு வகுப்புக்கும் அனுமதிக்கப்பட்ட இலவச எடைஅளவு மற்றும் அதிகபட்ச எடை மாறுபடும். குளிர்சாதன முதல் வகுப்பில் 70 கிலோவில் இருந்து 150 கிலோ வரைக்கும் எடுத்துச் செல்லலாம் என்றும் குளிர்சாதன இரண்டாவது அடுக்கு முதல் வகுப்பில் 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரையும் குளிர்சாதன மூன்றாவது அடுக்கு குளிர்சாதன இருக்கை 40 கிலோவிலிருந்து அதிகபட்ச 40 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றும் படுக்கை வசதியுடன் பயணிப்பவர்களுக்கு 40 கிலோவிலிருந்து 80 கிலோ வரையும் இரண்டாம் வகுப்பு பொது பிரிவின் கீழ் உள்ள பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோவில் இருந்து 70 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றும் இலவச அனுமதியை விட அதிகமாகவும் ஆனால் அதிகபட்ச வரம்பிற்குள்ளும் லக்கேஜ் இருந்தால் லக்கேஜ் அலுவலகத்தில் முன்கூட்டியே முன்பதிவு செய்து 1.5 மடங்கு சாதாரண கட்டணத்தை செலுத்தி பெட்டியிலேயே கொண்டு செல்லலாம் என்றும் லக்கேஜை முன்கூட்டியே முன்பதிவு செய்யாமல் எடுத்துச் சென்று பயணத்தின் போது பிடிபட்டால் இலவச எடை அளவை தாண்டிய எடைக்கு சாதாரண கட்டளைத்த போல ஆறு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த அபராத தொகை குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆக இருக்கும் என்றும் உங்கள் பெட்டியின் அளவு 100 சென்டிமீட்டர் நீளம் இருந்து 60 சென்டிமீட்டர் அகலம் 25 சென்டிமீட்டர் உயரம் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் அவை பிரேக் வேணி மட்டும் ஏற்றப்படும் என்றும் 2025-ல் பல முக்கிய ரயில் நிலையங்களில் லக்கேஜ்களை எடை போட மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளன விற்பனைக்கான பொருட்களை பயணிகள் பெற்றுக் கொள்ள ...எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் கூடுதல் லக்கேஜை முன்பதிவு செய்ய இணையதளத்தை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via