மாநில மொழிகளை பயன்படுத்துவது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும்

by Staff / 30-04-2022 03:02:47pm
மாநில மொழிகளை பயன்படுத்துவது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும்

நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் பயன்பாட்டில் நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொதுநல வழக்குகள் தன்னல நோக்குடன் தவறாக பயன்படுத்துவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

டெல்லி விஞ்ஞான் வானில் மாநில முதலமைச்சர்கள் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய மோடி நீதித்துறையும் அதன் உட்கட்டமைப்பு மேம்படுத்த அரசு சிறப்பாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். 

நிதித்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது டிஜிட்டல் இந்தியா மிஷினின் இன்றியமையாத பகுதி என அரசுக்கு. கருதுவதாகவும் மின் நீதிமன்றங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் பயன்பாட்டை நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என தெரிவித்தார். வழக்கொழிந்த 1,800 சட்டங்கள் காலத்திற்கு பொருந்தாமல் இருந்ததே 2015ஆம் ஆண்டில் கண்டறிந்து 1450 சட்டங்களை ஓ ளித்ததாக தெரிவித்தார்.

அவற்றில் 75  சட்டங்களை மட்டுமே மாநிலங்கள் ஓளித்ததாக குறிப்பிட்டார் முன்னதாக மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி என் வீ  ரமணா  திட்டங்களை தடுத்து நிறுத்தும் நோக்குடன் பொதுநல வழக்குகளை தன்னல வாழ்க்க தவறாக பயன்படுத்தும் நிலை உள்ளதாக தெரிவித்தார்.

அரசியல் வணிக நிறுவனங்களிலும் தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க அது ஒரு கருவியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார் மக்களின் எண்ணங்கள் தேவைகளைக் கருதி விவாதங்களுக்குப் பின் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அரசியலிலும் வணிக நிறுவுனங்களிலும் ஆகியவற்றின் செயலற்ற தன்மையால் அடிக்கடி வழக்குகள் வருவதாகவும் அவை தவிர்க்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டார். சட்டத்தின்படி ஆட்சி நடைபெற்றபோது அதில் நீதித்துறை குறிக்கிடாது  என தெரிவித்தார்.

நகராட்சி ஊராட்சி கடமைகளைச் செய்தால் காவல்துறை முறையாக விசாரித்தால் சட்டவிரோதக் காவல் துன்புறுத்தல் இல்லாவிட்டால்  நீதிமன்றங்களை நாடி மக்கள் வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

 

Tags :

Share via