107 வயதைத் தொட்ட ஜப்பான் இரட்டை சகோதரிகள்
உலகிலேயே அதிக வயதானவர்களைக் கொண்ட நாடான ஜப்பானைச் சேர்ந்த இரட்டையர்கள், உலகின் மிக வயதான இரட்டையர்கள் மற்றும் அதிக ஆண்டுகள் வாழும் இரட்டையர்கள் என இரண்டு கின்னஸ் சாதனைகளுக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
முதியவர்களை அதிகம் மதிக்கும் நாடான ஜப்பானில் செப்டம்பர் 1-ம் தேதி விடுமுறையுடன் தேசிய முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜப்பானின் வயதானவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். அந்நாட்டு மக்கள் தொகையில் 29 சதவிகிதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். உலகிலேயே சராசரி ஆயுட்காலம் அதிகமாக உள்ள நாடு ஜப்பான்தான். அங்கு 80,000-க்கும் மேற்பட்ட 100 வயதைத் தாண்டிய முதியவர்கள் உள்ளனர்.
Tags :