டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள், கரிமருந்து பறிமுதல்-பெண் உள்பட 2 பேர் கைது.

by Editor / 22-12-2024 12:05:41am
டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள், கரிமருந்து பறிமுதல்-பெண் உள்பட 2 பேர் கைது.

கிருஷ்ணகிரி ராசுவீதி பானக்கார தெருவை சேர்ந்த அப்ரோஸ் என்பவரின் மனைவி இம்தியாஸ், 42. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன், கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி அருகே சத்திரபதி சிவாஜி நகரில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அங்கு தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் வெடிபொருட்களை விற்பனை செய்வதாக, மகாராஜகடை போலீசாருக்கு தகவல் வந்தது.  இதையடுத்து இம்தியாஸ் குடியிருந்த வீட்டில், சோதனையிட்டதில், 150 பீஸ் டெட்டனேட்டர், 50 ஜெலட்டின் குச்சிகள், கரிமருந்து, 50 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இம்தியாசை கைது செய்தனர். விசாரணையில், இவர், வெடி பொருட்கள் மற்றும் கரிமருந்தை வேலூர் அடுத்த அல்லாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா, 40 என்பவரிடம் வாங்கி, இங்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, ராஜாவையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags : டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள், கரிமருந்து பறிமுதல்-பெண் உள்பட 2 பேர் கைது.

Share via