குக்கரில் சமைப்பதால் ஆபத்து?

by Editor / 21-09-2021 08:09:18pm
குக்கரில் சமைப்பதால் ஆபத்து?

குக்கரில் சமைப்பதால் எத்தனை நன்மைகள் இருக்கிறதோ அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

உருளைக்கிழங்கு, பாஸ்தா, அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும் போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆனால் பிரஷர் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைக்கலாம். ஏனெனில் பிரஷர் குக்கரின் அதிக வெப்பம் காரணமாக காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் குக்கருக்கு உள்ளேயே இருந்து வெளியே போவதில்லை. இதனால் அது ஆரோக்கியமான பயன்களைத் தரும். அதே சமயம் அரிசி, உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை நீங்கள் சமைக்கும் போது அது உங்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை குக்கரில் சமைக்கலாம். ஏனெனில் பாத்திரங்களில் சமைக்கும்போது வேக நேரமெடுக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கும்போது விரைவில் வெந்துவிடும் மற்றும் எளிதில் ஜீரணிக்க முடியும்.

 

Tags :

Share via

More stories

Logo