2 லட்சம் மதிப்பிலான 68 பாக்ஸ்  வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல்.

by Editor / 20-03-2024 08:27:46am
 2 லட்சம் மதிப்பிலான 68 பாக்ஸ்  வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜானுக்கு  வெளி மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அவரின் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் மாக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த டவேரா காரை நிறுத்தி சோதனை செய்ததில்  ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 68 பெட்டிகளில்  வெளி மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.பின்னர் கார் மற்றும் வெளிமாநிலம் மது பாக்கெட்டுகள் அடங்கிய 68 பெட்டி ளையும் பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை  காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ரகு மகன் முனியப்பன் (36) என்பவரை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : 68 பாக்ஸ்  வெளி மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் கார் பறிமுதல்.

Share via